அன்புடையீர் வணக்கம் சென்னை சைவ வேளாளர் பேரவையின் சார்பில் இந்த பதிவு பதிவிடப்படுகிறது சைவ வேளாளர் பேரவை சென்னை செய்தி பரல்கள் என்ற மாத இதழை ஒவ்வொரு மாதமும் இறுதிநாளில் பேரவை அஞ்சலில் சேர்க்கிறது. செய்திப்பரல் மாத இதழில் திருநெல்வேலி மரபுசார்ந்த சைவ வேளாளர் வரன்கள் மணமகன் மணமகள் தகவல்கள் என மாதம்தோறும் புதுப்பித்து வெளியிடப்படுகின்றன. இவ்வாறு தகவல்கள் வெளியிடுவதற்கு யாதொரு கட்டணமும் வசூலிப்பதில்லை இதில் மிகச் சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த மணமகன் மணமகள் தகவல்கள் அனைத்துமே மாதம்தோறும் எழுதிக் கொடுத்தால் மட்டுமே புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பெறுகின்றன. இதனை வெளியிடுவதற்கு பேரவையில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை ஆனால் இந்த பத்திரிக்கை உங்களுக்கு மாதம்தோறும் தவறாமல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு உங்கள் முகவரிக்கு வரவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் பேரவையில் ஆயுள் உறுப்பினராகச் சேர வேண்டும் பேரவையின் ஆயுள் உறுப்பினராகச் சேர்ந்தால் நீங்கள் பேரவையின் இணையதளமான chennaisvp.org என்ற இணையதளத்தில் திருமணத்துக்கு அணியமாயுள்ள உங்கள் மகன்,மகள் தகவல்களை பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் பதிவிட வேண்டும் . நிழற்படம் இல்லாத பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் இவ்வாறு பேரவையின் இணையதளத்தில் பதிவிட்ட அனைத்து தகவல்களும் ஆண்டுக்கு இருமுறை காணொளிக் காட்சியாக கூட்ட அரங்கில் காட்சிப்படுத்தப்படுகின்றன. பேரவையின் குடும்ப கூட்டு விழாவிலும் அல்லது பேரவை இதற்கென ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 25ஆம் நாள் சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள கற்பகம் உணவகத் திருமண மண்டபத்தில் நடத்தப்பெறும் முழுநேர திருமண தகவல் பரிமாற்ற நிகழ்ச்சியில் காணொளிக் காட்சியாக காட்சிப்படுத்தப்படுகின்றன.தங்களின் வரன் தகவல்களையும் இவ்வாறு காட்சிப்படுத்த வேண்டுமானால் நிச்சயமாக நீங்கள் பேரவை உறுப்பினராக இருந்தால் மட்டுமே இயலும் .மேலும் திருநெல்வேலி மரபு சார்ந்தவர்கள் மட்டுமே அவர்களும் முழுமையாக சைவர்களாக (வெஜிடேரியன்) என்ற என்ற அமைவில் இருந்தால் மட்டுமே அவர்கள் பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும். மணமகன் மணமகள் தொடர்பான தரவுகளை புதுப்பித்து வெளியிடுகிற ஒரே மாத இதழ் சைவ வேளாளர் பேரவையின் செய்திப்பரல் மட்டுமே என்பதை நீங்கள் நன்கு அறிய வேண்டும் இதனை முறையாக நீங்கள் பயன் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய பெரிய விருப்பமாகும் . கொரோனா காரணமாக ஆண்டுவிழா நிகழ்வுகளில் மாற்றம் இருக்குமானால் ZOOM MEETING என இவை காட்சிப்படுத்தப்படும். விரைவில் இந்த காணொளி காட்சி ZOOM MEETING வழி நடைபெறவுள்ளது. எனவே திருநெல்வேலி சைவ மரபில் வரன் தேடுவோர் மட்டும் உடனடியாகப் பேரவையில் உறுப்பினராகி பேரவை இணைய தளத்தில் நிழற்படத்துடன் பதிவிட வேண்டுகிறோம். க.ந வீரபாகுசுப்பிரமணியன் செயலாளர்.

திருமணத் தகவல் பரிமாற்றம்

மாதம் தோறும் முதல் மற்றுm

மூன்றாம் ஞாயிற்றுக் கிழமைகளில்

முற்பகல் 10 மணி முதல் 1 மணி வரை

சென்னை , தியாகராய நகர்

திருப்பதி தேவஸ்தானம் எதிரில்

அமைந்துள்ள

செ.தெ.நாயகம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்

நடைபெற்று வருகிறது

திருமணத் தகவல் பரிமாற்றம்

முற்றிலும் இலவசம்.

திருநெல்வேலி சைவ மரபினர் 

பயன்கொள்ளலாம்

செயலர்

Featured Brides
 
 
 
Featured Grooms

NEITHAVAYAL LAND OF SSERF TRUST