சைவ வேளாளர் பேரவை - சென்னை எனும் இவ் அமைப்பு 1958 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. திருநெல்வேலிச் சீமையிலிருந்து புலம் பெயர்ந்து சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில், பணிநிமித்தமும், தொழில் நிமித்தமும் ,தொண்டுக்காகவும், அறம் வளர்க்கவும் தங்கிவிட்ட சிறுபான்மையினரான நாம் நமது இன மக்களை அடையாளம் கண்டு கொண்டு, ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து, பரஸ்பர உதவிகளைச் செய்து கொள்ளவும், திருமண உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும்,தொழில்களுக்கும் , வேலைவாய்ப்புகளுக்கும், பதவிகளுக்கும் வழிகாட்டி உயர்த்திக்கொள்ளவும், நமது இனப் பெருமக்கள் மற்றும் பொது மக்களின் மேம்பாட்டுக்காக பள்ளி, கல்லூரிகள், திருமணக்கூடங்கள், தொழில் நிறுவனங்கள் நிறுவவும் போன்ற உயரிய நோக்ககங்களைக்கொண்டு இயங்கி வருகிறது.
68 ஆண்டுகளாக இயங்கி வரும் நமது பேரவையில் 5000 உறுப்பினர்கள் உள்ளனர்.
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் பெற்ற நம் இனச்செல்வங்களுக்கு ஊக்கப்பரிசு வழங்குதல்,
நலிந்த பிரிவினருக்குக் கல்வியினைத் தொடர கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற அறப்பணிகளைச் செய்து வருகிறது.
மிகத் தேவையான மணமகன்-மணமகள் தகவல்களைத் திருமணத்தகவல் பரிமாற்ற நிகழ்வாக மாதம் இருமுறை முற்றிலும் இலவசமாகவும் நடத்திவருகிறது.
சைவ வேளாளர் பேரவை - செய்திப்பரல்கள் எனும் மாத இதழை அனைத்து ஆயுள் உறுப்பினர்களுக்கும் இலவசமாக அனுப்பி வருகிறது.
500க்கும் குறையாத வரன்கள் தகவலை மாதம் தோறும் புதுப்பித்து வெளியிட்டு வரும் பெரும்பணியினை வேள்வியாகச் செய்து வருகிறது.
இப்போது இப்பணியினை இணைய தளம் மூலமாகவும் செய்வதில் பெருமகிழ்வடைகிறோம்.
பேரவையின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து உதவிட சைவ வேளாளர் பெருமக்கள் அனைவரின் ஒத்துழைப்பினையும் வேண்டுகிறோம்.